சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Tuesday, 5 March 2013

தீபம்ஏற்றுதல்



                               தீபம்ஏற்றுதல்

ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார்.ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.

எளி அனல் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என திருமூலர் திருமந்திரத்தில் தீபம் ஏற்றுவதனை அருளியுள்ளார்.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்க்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கை தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது.

இதிலிருந்து திருக்கோவில்கலில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம். 

கோயில்களில் கிரக தோஷங்களுக்கு செய்ய வேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்தபரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.

ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது. 

தினந்தோறும. தீபம் ஏற்றி, வழிபாடுசெய்வதற்கும் நேரம், நெறிமுறை அவசியம்.அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு
மணிக்குள் ஏற்றிவிடுவதாலும் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் உண்டாகும்.
விளக்குத் துலக்க வேண்டிய நாட்கள். 
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்கள்ல் தான் குத்துவிளக்கைத் துலக்கவேண்டும்.
செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் துலக்கக் கூடாது.
எண்னெய் ஊற்றிய பின்னர் தான் திரி இட வெண்டும்.
முதலில் எண்னெயையோ, நெய்யையோ ஊற்ற வெண்டும். 
அதற்குப் பின்னர் திரியிட வெண்டும்


உலோக விளக்குகளின் பயன்கள்
அகல் விளக்கு ( மண்ணால் செய்து சுடப்பட்டவை) சர்வ மங்களமும் நல்கும்
வெண்கல விளக்கு தோஷங்கள் விலகும்
பித்தளை விளக்கு ஓற்றுமையாய் வாழ உதவும்
செப்பு விளக்கு மனதிற்கு அமைதியைத் தரும்
வெள்ளி விளக்கு இல்லத்தில் அமைதி நிலவும்
தங்க விளக்கு நீண்ட ஆயுள் விருத்தி
நவரத்தின விளக்கு நவக்கிரக தோஷம் நீங்கும்
எவர் சில்வர் விளக்கு கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது
நெய் வீட்டின் சுகத்தையும், நலத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மிக மிகச் சிறப்பான பலன்கள் தரவல்லது.
நல்லெண்ணெய் எல்லாத் துன்பங்களும் விலகும் 
சகல பீடைப் பரிகாரங்களுக்கும் திர்க்க ஏற்றது விளக்கெண்ணெய் தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், தாம்பத்ய சுகம் கிட்டும்,
கடலை எண்ணெய் சிறப்பு அல்ல  
இலுப்பைஎண்ணெய் கடன் தொல்லை நீங்கும். ஈசனுக்கு மிகவும் உகந்ததாகும்.
தேங்காய் எண்னெய் தாம்பத்திய சுகம் மற்றும் குல தெய்வ அருள் கிடைக்கும் 
வேப்பெண்ணை வீட்டில் ஒரு போதும் விளக்குப் பயன்படுத்தக் கூடாது. 
ஐந்து வகை எண்ணெயும் கலந்த்த தீபம் சகல ககரிய சித்தியையும் அளிக்கும். ஒவ்வொரு எண்ணெய்க்கும் உரிய பலன்களையும் சேர்த்து அளிக்கும். அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது.

ராகு தோஷம் 21 தீபங்கள்
சனி தோஷம் 9 தீபங்கள்
குரு தோஷம் 33 தீபங்கள்
துர்க்கைக்கு 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
திருமண தோஷம் 21 தீபங்கள்
புத்திர தோஷம் 51 தீபங்கள்
சர்ப தோஷம் 48 தீபங்கள்
காலசர்ப தோஷம் 21 தீபங்கள்
களத்திரதோஷம் 108 தீபங்கள்

நல்லெண்ணெய் ஊற்றி சுடர் விட்டுப்பிரகாசிக்கும் விளக்குகளைத் தானம் அளிப்பவன்,பூவுலகில் சிறப்பு மிக்க வாழ்வைப்பெறுவதொடு முடிவில் முக்தியை அடைகிறான்.

இறைவனின் ஆலயத்தில் விளக்கு ஏற்றியவன், தான் விரும்பும் அனைத்து சுகஙளையும்பெருவான். இவ்வாறு நான்கு மாதங்கள் தொடர்ந்து கைங்கர்யம் செபவனும், கார்த்திகை மாதம் முழுதும் கைங்கர்யம் செய்தவனும் வைகுந்தம் செல்வான்.
தீப தானமே சிரந்த விரதமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. தீப தானம் செய்பவன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவான். அவன் தேக ஆரோக்கியம் எப்போதும் நல்ல நிலைமையில் இருக்கும். அவன் கண்கள் குரிய பார்வை பெற்று விளங்கும்

கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்வது எல்லா
வித வ்ளங்களையும் நலன்களயும் கொடுக்கும் என்ரு அக்கினி புராணம் சொல்கின்றது.

நெய்விளக்கு, நைட்ரஜன் ஆக்சைட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது பரவும் இடத்தில் தவறான அணுக்கதிர் வீச்சுக்கு இடமேயில்லை.இப்படிப்பட்ட பெண்களின் கர்ப்பப்பை மிகவும் வலிமையுடையதாகவும் செறிவோடும் இருப்பதுதான் சிறப்பு.இதனால் இவர்களின் கருப்பைகளில் உருவாகும் குடும்ப வாரிசுகளின் ஆரோக்கியத்தில் ஒரு குறையும் இருக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

No comments:

Post a Comment