சந்தன அலங்காரம்
ஜோதிட ரீதியாக கேது ஒரு ஞான கிரகம். தத்துவ ஞானிகளையும், மஹான்களையும் உருவாக்குபவர் கேது. பாம்பு உருவம் பெற்ற கேது. ஒரு சமயம், பிள்ளையாரைப் பிடிக்கப் போனார். சூரியனையே பிடித்துவிட்ட எனக்கு இந்த பிள்ளையார் எம்மாத்திரம்?என்று இறுமாப்புடன் சென்ற அவரைப் பூணூலாக அணிந்து கொண்டார் பிள்ளையார். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள்,
திங்கட்கிழமைதோறும் இங்கு உள்ள பிள்ளையாரை வழிபடுவது நல்லது. இதன் மூலம் கேதுவினால், வரக்கூடிய மாங்கல்ய தோஷம், புத்திரதோஷத்தையும் பிள்ளையார் அகற்றுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கேதுவை மோட்சகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானத்தின் வடிவமான பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவரது அருளால் கேது தோஷம் நீங்கி நன்மை நடைபெறும்
அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க
அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.
பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.
திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.
புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.
உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.
ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.
சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.
சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.
விசாகம்- திருநீறு அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.
கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
உத்திராடம்- அறுகம்புல் மாலை.
திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.
அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.
சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.
No comments:
Post a Comment