சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 22 March 2013

பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு



இந்த நாள் படிக்கும் மாணவர்களுக்கு  மிகவும் விசேஷமான நாளாகும்,தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.

கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
 
உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். புதன் கல்விக்குரிய கிரகம். ஜாதகத்தில், புதனும் சூரியனும் ஒருங்கிணைந்திருப்பதைப் பொறுத்து, புத ஆதித்ய யோகம் இருக்கும். இந்த குழந்தைகள் நன்றாகப் படிப்பர். இவ்வாறு இல்லாதவர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் உத்தரம் நட்சத்திரம். இவர்கள் உத்தரம் நட்சத்திர நாளில், சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பெற்றோரான சங்கரநாராயணரை வணங்க வேண்டும். அதாவது, உத்திரம் நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியனின் அதிதேவதை சிவனும், புதன் கிரகத்திற்குரிய அதிதேவதை திருமாலும் இணைந்து பெற்ற பிள்ளையான சாஸ்தாவை வழிபட்டால், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் 

இங்கு  பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு  சிறப்பு கலச பூஜை மற்றும் கல்பா அபிஷேகம்மும்
ஸ்ரீ முருகருக்கு அபிஷேகம்மும் /சந்தன அலங்காரமும்    நடைபெறுகிறது.  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

No comments:

Post a Comment