சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 1 March 2013

Annadhanam At Ambattur Sabarimalai



தானங்களில் மிகச் சிறந்தது அன்னதானம் என்று நம் வேதம், சாஸ்திரங்களும், புராணங்களும், ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன.. 
நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது மாற்ற முடியாது , பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக் கர்மவினைகள் குறையத்துவங்கும் அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.

நம் கர்மவினைகளை மாற்றும் சக்தி அன்னதானத்துக்கு உண்டு மனிதனின் அன்றாட செயல் திட்டங்களில் அதிதிகளுக்கும், தன்னைச் சார்ந்தவர்க்ளுக்கும், தன்னிடம் பணிபுரிபவர்களுக்கும் உணவு அளித்து விட்டே தான் உண்ண வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது

அன்னதானத்தை மனப் பூர்வமாக செய்வது அவசியம் ஆகும்

ஆன்மா ஆகிய நமக்கு உணவு,உறக்கம்,மூப்பு,பிணி எல்லாம் தேவை கிடையாது. ஆனால் நாம் இருக்கும் இந்த உடலுக்கு உணவு வேண்டும். இந்த உடம்பில் ஆன்மாவாக இருக்கும் நாம் எல்லா உடம்புகளிலும் ஆன்மாவாகவே இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அன்னதானம் செய்யும் போது எதிரில் இருக்கும் நபர் பசியால் வாடியநிலையில் வந்தவர் உணவை உண்ணும்போது எதிரில் அமர்ந்து இருப்பவர் தானேதான் என்று அறிவினால் உணர்துகொண்டு அவருக்கு ஏற்படும் பசி நீங்கிய மகிழ்ச்சியை தனக்கே ஏற்பட்ட மகிழ்ச்சியாக அனுபவபடுவதே கடவுள் இன்பமாகும்

இதுநாள் வரை கல்லை போல் இருக்கி இருந்த ஆன்மாவானது இந்த கருணை செயலால் உருக ஆரம்பிக்கும் உருக ஆரம்பித்தபிறகு ஆன்ம நெகிழ்ச்சி ஏற்படும் பின்னர் கடவுள் நிலை விளங்க ஆரம்பிக்கும் 

இவ்வாலயத்தில் பிரதி ஞாயிறு அன்று இங்கு மிகவும் சிறப்பாக அன்னதானம் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும்  கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்    

No comments:

Post a Comment