வித்யா ஹோமம் (கல்வியில்
மேன்மை)
மாணவர்கள்
கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், படிப்பில்
மட்டும் கவனம் செல்லவும், நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும்,
செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும்.
ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
குழந்தை
பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும்.
குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம்.
மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட
குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்.
மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள்
விருத்தி)
பிறந்தநாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம்
மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காக இது சிவபெருமானுக்கு அர்ப்பணம்
செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தை செய்தால் ஆயுள் விருத்தியடையும். நீண்டநாட்களாக தொடரும்
வியாதிகள் நீங்கும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும்
அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும்
எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி
ஹோமம் செய்ய வேண்டும்.
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை
பாக்கியம்)
திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள்
நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து
செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும்
இந்த ஹோமத்தை நடத்தலாம்.
No comments:
Post a Comment