சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Sunday, 17 February 2013

வாழ்க்கையே நம்பிக்கை

சிவபெருமானும் பார்வதியும் ஒருநாள் வானவீதியில் பட்டின பிரவேகம் செய்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் அதிகமான மக்கள் குழுமி குளிப்பதைப் பார்த்த பார்வதி நாம் எவ்வளவோ இடத்தை சுற்றிப்பார்த்து வந்து கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த இடத்தில் மட்டும் மக்கள் அதிகமாக குளிப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறுகிறார்.
இது மிகவும் புனிதமான ஸ்தலமாகும் இந்த இடத்திற்கு பெயர் காசி. இங்கு ஓடும் நதியில் குளிப்பவர் பாவம் நீங்கி புண்ணியம்  பெற்று சொர்க்கலோகம் செல்லலாம் என நினைத்து குளிக்கிறார்கள் என கூற உடனே பார்வதி அப்படி என்றால் இந்த  புண்ணிய நதியில் குளிப்பவர் எல்லோரும் சொர்க்கலோகம் செல்வார்களா எனக் கேட்க
சிவபெருமான் எல்லோரும் செல்ல மாட்டார்கள் ஒரு சிலர் மட்டும் தான் செல்வார்கள் என கூற மற்றவர்கள் ஏன் போகமாட்டார்கள் என பார்வதி கேட்க
நான் சொன்னால் புரியாது. நாமே ஒரு நாடகம் ஆடுவோம் அதன் முடிவில் நீயே தெரிந்து கொள்வாய் எனக்கூறி சிவபெருமான் ஒரு நோயாளிபோல் நதிக்கரையில் உருமாரி உயிர் போய் பிணமாக படுத்து உள்ளார்.
பார்வதியும் உருமாரி தலை விரிகோலமாக அழுது புலம்புகிறார்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடி விட்டது யாரோ யாத்திரை வந்த ஒருவன் பெண்ணிடம் வந்து உன் கணவன் உடலை தகனம் செய்ய நாங்கள் உதவி செய்கிறோம்.எனக் கூற
அதற்கு அந்தப் பெண் அய்யா ,என் கணவன் இறக்கும் போது ஒன்று கூறினார். அது என்னவென்றால் என் உடலை தகனம் செய்பவர் பிறந்ததிலிருந்து இன்று முதல் யாருக்கும் சிருபாவமேனும் செய்யாதவர் தான் என் உடலை அடக்கம் செய்ய வேண்டும்.அப்படி செய்த பாவத்தை மறைத்து அடக்கம். செய்தால் அவர்கள் தலை சுக்குநூறாய் உடைந்து போய்விடும் மேலும் ஏழு பிறப்பிலும் கழுதையாக பிறப்பார்கள் என்று கூறியவுடன் அருகில் நின்றவர்கள் பயந்து போய் விட்டார்கள்
நேரம் போய் கொண்டிருந்தது.சூரியனும் மறைய தொடங்கி விட்டது.
அப்போது வாட்டசாட்டமாக வாலிபன் வந்து நான் உன் கணவன் உடலை அடக்கம் செய்கிறேன் எனக் கூற என் கணவன் கூறியது உனக்கு தெரியுமா? என கேட்க
அதற்கு வாலிபன் எல்லாம் எனக்கு தெரியும். நான் இந்த நதியில் குளித்தவுடன் நான் செய்த பாவம் நீங்கிவிடும்.பின் உன் கணவன் உடலை தகனம் செய்ய தகுதிடையவன் ஆவேன்.என கூறி நதியில் குளித்துவிட்டு வந்து பார்த்தல் யாரையும்  காணவில்லை.
சிவபெருமான் பார்வதியிடம் இவன் தான் சொர்கலோகம் செல்வான். ஏனென்றால் இவன் தான் இந்த நதியை நம்பினான்.மற்றவர்கள் எல்லாம் நதிக்கரையில் தான் நின்றார்கள் ஏன் இந்த எண்ணம் வரவில்லை, எனக்பார்வதி கேட்க,   அவர்களுக்கு இந்த நதி மீது நம்பிக்கை இல்லை எனக்கூறினர். சிவபெருமான்
தேங்காய் பிரார்த்தனையை  6 வாரங்கள் தொடர்ந்து ஏதேனும் ஒரு குறிபிட்ட நாளில் ஸ்ரீ ஐயனை தரிசித்து கோரிக்கையை வேண்டி நம்பிக்கையுடன் பிரார்த்தனையை செய்து வர ஸ்ரீ ஐயனின் பேரருளால் உடல் நலம்பெரும்,குழைந்தை பாக்கியம் கிட்டும்,பிள்ளைகளின் படிப்பு மேன்மை பெரும்,வியாபார விருத்தி,திருமணத்தடை,மற்றும் நினைத்த காரியம் யாவும் நிறைவேறும்    

நம்பிக்கையே வாழ்க்கை. ஆகவே  செய்யும் செயலை நம்பிக்கையுடன் செய்வதால். அடையும் பலனோ  ஏராளம் .


No comments:

Post a Comment