சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Tuesday, 29 January 2013

shani dosham



காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணி யிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும். 
நோய் நொடிகள் தீர்வதற்கு சனிக்கிழமை சாயங்காலம் சுவாமி ஐயப்பனின்  சன்னிதியில் எள் கலந்த நல்லெண்ணெய் அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையில் அல்லது 27 தீபங்கள் ஏற்றி வரலாம். 

தொழில், வேலை வாய்ப்புகள் சார்ந்த விஷயங்களுக்கு பாலபிஷேகம் செய்து வஸ்திரம் சமர்ப்பணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் நீல நிற வஸ்திரம் சமர்ப்பித்து, இளநீர், தேன்,பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்து தீபமேற்றி தரிசனம் செய்தால் தமக்குக் கீழுள்ளவர்களால் ஆதரவும், சுமூக அ
μகுமுறையும் நிச்சயம் உண்டாகும். 

மேற்குறிப்பிட்ட விஷயங்களை அனுசரிக்க முடியாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் அருகில் உள்ள எந்தத் திருக்கோவிலானாலும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்து இரவில் பாலோ, பழங்களோ அருந்தி விரதமிருந்து காலையில் குளித்து முடித்து உணவுண்டு விரத பூர்த்தி செய்யலாம். எவ்விஷயத்திலும் சரியான அளவுமுறையும், நிதானமும் முக்கியம் என்பதையே சனி என்ற கோள் நமக்கு குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதை அவ்வாறே கடைப்பிடித்தால் தேவையற்ற சங்கடங்களை நாம் நிச்சயம் தவிர்த்து விடலாம்.

இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment