சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Wednesday, 23 January 2013

' தத்வமஸி

' நான் வேறு , அடுத்தவர் வேறு ' என்ற எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் .ஆணிவேர் வெட்டப்பட்டால் மரம் சாய்ந்து விடும்.... ' ஒப்பீடு ' எண்ணத்தை அகற்றிவிட்டால் பிரச்னைகள் ஓய்ந்துவிடும் .
இதைத்தான் --
நமது ஆன்மிகப் பாரம்பரியம் , ' தத்வமஸி ' என்ற அடிப்படை அறிவுரையாக்கியுள்ளது !
தத்வமஸி = தத் + த்வம் + அஸி . தத் என்றால் ' அது '; த்வம் என்றால் ' நீ '; அஸி என்றால், அறிவாயாக ! ' அதாவது , ' அதுவே நீ என்று அறிவாயக ! ' என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை அறிவுரை .'அது ' என்பது அடுத்தவரின் அனுபவங்கள் ; ' நீ ' என்பது உங்களுடைய அனுபவங்கள் .'அதுவே நீ என்று அறிவாயாக ' என்றால் , ' அடுத்தவரும் நீங்களும் சமம் ' என்று அர்த்தம் .

No comments:

Post a Comment