Thursday, 11 April 2013

அம்பத்தூரில் ஓர் சபரிமலை உருவான வரலாறு



      

  
    அம்பத்தூர் பானு நகரில் வசிக்கும் திரு முத்துகிருஷ்ணன் குருசுவாமி அவர்கள் ஐயப்பன் மீது தீராத பக்தி கொண்ட அன்மீக அன்பர். 1964 ம் ஆண்டு முதல் சபரிமலைக்கு ஆண்டுதோறும் தன்  குழுவுடன் இருமுடி கட்டி  செல்வது வழக்கம்.
        அவரைப்போலவே அவர் மகனும் திரு  அம்பாசங்கர்  அவர்கள் ஐயப்பன் மீது அதிக ஈடுபாடும் பக்தியும் கொண்டவர், பஜனைசெய்வதிலும்/  கீர்த்தனைகள்பாடுவதிலும்  ஆன்மிகத்திலும், அன்னதானம் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர், எல்லோரிடத்திலும் அன்பு கொண்டவர், கருணையுள்ளம் கொண்ட சிறந்த பண்பாளர்.   
ஒவ்வொரு ஆண்டும்/ மாதமும் தன் குழுக்களுடன் சபரிமலைக்கு அனைவருடன் இருமுடி கட்டி  சபரிமலை சென்று ஐயனை தரிசிப்பது வழக்கம்
      அவ்வாறு      2000 ம்  ஆண்டு சபரிமலை செல்லும்போது வண்டி பெரியார் கிராமதேவதைக்கு படையல் இட்டு பூஜை போடும்போது ஏன் அம்பத்தூரில் ஒரு சபரிமலையை உருவாக்க கூடாது என்று எண்ணம் அங்கு தோன்றியது  இது வண்டி பெரியார் கிராமதேவதை யின் கட்டளையா? அல்லது எம்பெருமான் ஐயப்பனின் பேரருளா என்பது விளங்கவில்லை. இதனைப்பற்றி தன்னுடன் வந்த பக்தகோடிகளுடன் கலந்து ஆலோசிக்கும் போது அம்பத்தூரில் வசிக்கும் திரு வேல்முருகன் அவர்களின் புதல்வர் திரு S .ஸ்ரீகாந்த் அவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஐயப்பன் கோவிலை கட்ட நான் இலவசமாக நிலம் தருகிறேன்  என்று கூரினார் .
   சபரிமலை யாத்திரை முடிந்து அம்பத்தூர் வந்த உடன் தனக்கு சொந்தமான நிலத்தை ஐயப்பன் ஆலயம் கட்ட தானமாக தந்தார். மேலும் இது சம்பந்தமாக திரு V S D . ரமேஷ் அவர்களை  அணுகியபோது அவரும் பெரும்தன்மையுடன் தனது நிலத்தை தானமாக தந்து உதவினார்.  .
       மேலும் பல ஐயப்ப பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து சாஸ்த பரிபாலன டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆலயம் கட்ட முடிவெடுத்து 2001 ம் ஆண்டு அம்பத்தூர்ல் சபரிமலை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலையில் உள்ளதுபோல் ஒரு மினி சபரிமலையை 18ம் படியுடன்  உருவாக்கி பக்தர்களின் பார்வைக்காக அம்பத்தூர் மகாலட்சுமி கல்யாண மண்டப்பத்தில் வைக்கபட்டது,அதற்கு பக்தர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மேலும்  உற்ச்கமும் உக்கத்தையும் தந்தது,இதனை தொடருந்து காணிபையூர் திரு கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களை அணுகியபோது அவர் சபரிமலையில் உள்ளது போல உள்ள ஆலய அமைப்பு   வரைபடத்தை தயாரித்து கொடுத்தார்.   அதன்பிறகு  டிரஸ்ட் நன்கொடைகள் பெற செயல்பட துவங்கியது பக்தகோடிகளின் தாராளமான நன்கொடைகளாலும்  ஐயப்பனின் பேரருளும்  2005 ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி சபரிமலை தாந்திரி திரு மொஹனருகண்டரு அவர்கள் தலைமையில் பல்லாயிரம் பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்ப என்ற சரணகோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது

No comments:

Post a Comment