1)தினம் சிறிது நேரம் அமைதியில் இருங்கள்;உடல்,மனம் இவற்றைத் தளர்த்தி,உங்கள் பிரச்சினைகளை மறந்து கடவுளைநினையுங்கள்.அவரிடம் உங்கள் பிரச்சினைகளுக்கு முடிவு இருக்கிறது.
2)உங்கள் நண்பனுடன் பேசுவது போல் கடவுளிடம் பேசுங்கள்.வழிபாடு என்பது வெறும் வேண்டுகோள் அல்ல.அவனுக்கு எல்லாம் தெரியும்;நான் என்ன சொல்வது என்று எண்ணாமல், அனைத்தையும் மனம் விட்டு அவனிடம் சொல்லுங்கள்.அவ்வாறு சொல்லும் போது உங்கள் மனம் திறந்து கொள்கிறது .அவன் காட்டும் வழி உங்களுக்குப் புரிகிறது.
பிரார்த்தனைக்கு உகந்தவை ஸ்லோகங்கள்,பாடல்கள் மட்டுமே என்று எண்ணாதீர்கள். உங்கள் மொழியிலேயே,அவனிடம் பேசுங்கள்.
அவனுக்குப் பிடித்த மொழி, உங்கள் இதயத்தின் மொழி;அன்பின் மொழி!
3)நாம் அழுக்குகளால் நிரம்பியிருக்கிறோம்;
கடவுளை எப்படி அணுகுவது;
அவன் ஏற்றுக் கொள்வானா என்றெல்லாம் சிலர் நினைக்கலாம்.
ஒரு குழந்தை சாக்கடையில் விழுந்து அசுத்தமாகி விட்டால் அம்மாவிடம்தான் ஓடும்;தன்னைக் கழுவி விடச் சொல்லும்.
4)பேருந்தில் செல்லும்போது தேவையற்ற எண்ணங்களால் மனத்தை நிரப்பாமல், அவனோடு, மனத்தால் பேசுங்கள்.எப்போதெல்லாம் நேரம் கிடைகிறதோ,அதுஒருமணித்துளியாகஇருந்தாலும்,வேலையின்நடுவே,உணவின்போது,எப்போது வேண்டுமானாலும்,அவனை அன்புடன் நினையுங்கள்.நீங்கள் தனியாக இல்லை அவன் உங்களுடன் இருக்கிறான் என்ற தைரியம் வரும்.
5)நீங்கள் கேட்பவற்றில் சில உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.நீங்கள் கேட்டு அவன் தரவில்லையென்றால் அது உங்கள் நன்மைக்கே என உணருங்கள்.காய்ச்சலில் வாடும் பிள்ளை ஐஸ்கிரீம் கேட்டால் தாய் வாங்கித்தருவாளா?
உங்கள் பிரார்த்தனைக்கு அவன் நான்கு விதமாகப் பதில் அளிக்கிறான்,
”சரி;
இல்லை;
பொறு;
இதை விடச் சிறந்தது இருக்கிறது” என்று.
எதை எப்போது தரவேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.
நம்புங்கள்.
No comments:
Post a Comment