Tuesday, 22 January 2013

கணபதி ஹோமம்


முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது.  கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது.

யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி

ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம்.

நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான்.

எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான்.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான்.

சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது.

கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார்.

கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.

No comments:

Post a Comment