Monday, 9 September 2013

விநாயகர் சதுர்த்தி விழா

அம்பத்தூர் சபரிமலையில்  இன்று  முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது 








விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற ஆதரவு தந்து உதவிய பக்தர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை கணிக்கையக்குகிறோம். 

Tuesday, 9 July 2013


                         !!!சுவாமியே சரணம் ஐயப்பா !!!

8 ம் தேதி இவ்ஆலயத்தின் ப்ரதிஷ்ட தினத்தை முன்னிட்டு 7ம் தேதி இவ்ஆலயம் உருவான வரலாறு புத்தகம் (அம்பத்தூர்ல் ஓர் சபரிமலை) வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .







அன்று மாலை கலச ஸ்தாபனம் மற்றும் ஜபம் நடைபெற்றது
                             
8 ம் தேதி காலை 5.30 மணிக்கு  கணபதி ஹோமம் ,நவக்ராஹா ஹோமம்,வித்யா ஹோமம் மற்றும் கலச பூஜை அதனை தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு ஸ்பெஷல் சந்தனத்தால் அபிஷேகம் நடைபெற்றது
                                                 
                                                 ஸ்ரீ முருகர் விபூதி அலங்காரம்


                                            ஸ்ரீ நாகராஜர் மஞ்சள் அலங்காரம்



                                         ஸ்ரீ மஞ்சமாத மஞ்சள் அலங்காரம்


                                         ஸ்ரீ மஞ்சமாத மஞ்சள் அலங்காரம்

                                ஸ்ரீ விநாயகர்  சந்தானம் & நாணய அலங்காரம் 


           08.07.13 அன்று காலை 9.00 மணிக்கு  அன்னதானம் நடைபெற்றது 







 விழாவிற்கு வந்து சிறப்பித்த அணைத்து ஐயப்ப பக்தர்களுக்கும்  எங்களின் நன்றியை கணிக்கையக்குகிறோம்

Tuesday, 2 July 2013

ப்ரதிஷ்ட தினத்தை முன்னிட்டு

          !!!சுவாமியே சரணம் ஐயப்பா !!!

வரும் 8 ம் தேதி இவ ஆலயத்தின் ப்ரதிஷ்ட தினத்தை முன்னிட்டு  7ம் தேதி இவ்ஆலயம் உருவான வரலாறு புத்தகம் (அம்பத்தூர்ல் ஓர் சபரிமலை) என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற உள்ளது, அன்று மாலை ஜபம் நடைபெறும்  
8ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ  ஹோமம்,வித்யா ஹோமம் மற்றும் கலச பூஜை,  ஸ்ரீ அய்யப்பனுக்கு கலபா அபிஷேகம் நடைபெற உள்ளது.
கலசபூஜையில் 11 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்

கட்டணம்
கலபா அபிஷேகம்   ரூபாய்  300/=
  (ஸ்பெஷல் சந்தன அபிஷேகம்)
கலச பூஜை                           300/=
மஹா கணபதி ஹோமம்       500/=
கணபதி ஹோமம்                 100/=  (சங்கல்பம் மட்டும்)
(நவக்கிரஹ  தோஷம் உள்ளவர்கள் இந்த ஹோமம்  செய்து பயன் அடையவும்)                              
 நவக்கிரஹ  ஹோமம்           1000/=
வித்யா ஹோமம்   300/= (மாணவர்கள்கல்வியில்சிறந்து விளங்க )
பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம்   

Monday, 1 July 2013

ஜூலை மாத முக்கிய நாட்கள்



04.07.13   கிருத்திகை
05.07.13   பிரதோஷம்
06.07.13   சிவாராத்திரி
08.07.13   அமாவாசை
10.07.13   வளர்பிறை முகூர்த்தம் 
12.07.13   சதுர்த்தி
14.07.13   சஷ்டி விரதம் & வளர்பிறை முகூர்த்தம்
15.07.13   வளர்பிறை முகூர்த்தம்
19.07.13   வளர்பிறை முகூர்த்தம்
 20.07.13  பிரதோஷம்
 21.07.13  வளர்பிறை முகூர்த்தம்
 22.07.13  பௌர்ணமி
 25.07.13  சங்கடஹர சதுர்த்தி
 28.07.13  சஷ்டி & தேய்பிறை முகூர்த்தம்
 29.07.13  தேய்பிறை முகூர்த்தம்
 31.07.13  கிருத்திகை

Wednesday, 26 June 2013

வாழ்கையின் ரகசியம்



சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.

இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.

பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை. அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.

தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.

நீங்கள்  நதியைப் போல் இருங்கள். உங்கள்  ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதிர்கள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறுங்கள். வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பீர்கள். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதிர்கள், தொடர்ந்து சிறந்து செயல் படுங்கள். தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதிர்கள். பயனில்லை.

தொடர்ந்து முன்னேறுங்கள். பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதிர்கள். உங்கள் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள்.  சில சௌகரியமான  நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதிர்கள்.  அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீங்கள்  சரித்திரம் படைக்க முடியும். உங்கள் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதிர்கள்.  

வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீங்கள்  சந்திப்பவர்கள் எல்லாம் உங்களால்  பயன் பெறுவர். பலர் சிறக்க நீங்கள் காரணமாவிர்கள் . கஷ்டங்களும்,சங்கடங்களும் நம்மிடம் யாரும் கையில் கொடுபதில்லை,அவைகள் நாம் அறிந்தும்,அறியாமலும்  செய்யும் தவறுகளால் ஏற்படுகின்றன. அந்த தவறுகளை ஏற்று கொள்ளும் மனபக்குவம் நமக்கு இருந்தால் போதும். வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.

நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

Friday, 14 June 2013

Wednesday, 12 June 2013

Monday, 10 June 2013

பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை


ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”
“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”
“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.
பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.
அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல



Sunday, 9 June 2013

பிரம்ம காயத்ரி



காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும் அமைந்திருக்கிறது. பரப்பிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்குப் பல காயத்ரீ மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளைத் தேவீ காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்பிரமணிய காயத்ரீ, கணேச காயத்ரீ என்று பாகுபடுத்தலாம்.

இத்தனைவிதக் காயத்ரிகளுள் நாடு முழுதுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொதுவாக இருந்துவருகிற காயத்ரி ஒன்றே. அது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப் படுகிறது.  பரமஹம்ச காயத்ரீ என்பது ஒன்றுண்டு; அது துறவிகளுக்கு உரியதாகும். துறவியர்கள் உட்பட வழிபாடு  செய்கின்ற மக்கள் எல்லார்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி.

ஒரு மந்திரத்தினுடைய அர்த்தம் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அதை உச்சரிக்கின்ற அளவு உச்சரிக்கின்றவர்களை அது பக்குவப் படுத்துகிறது. அந்த வல்லமை மந்திர சக்தி என்று சொல்லப் படுகிறது. மந்திரத்தின் ஓசைக்கு அலாதியான சக்தி இருக்கிறது. இறைவனுய குறிப்பிட்ட திருநாமம் மந்திரமாகிறது. ”ஓம் நம்: சிவாய” என்பது மந்திரம். “ஓம் நமோ நாராயணாய” என்பது மந்திரம். இவை சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உரிய மந்திரங்களாம். பிரம்ம காயத்ரியை எந்தத் தெய்வத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தெய்வத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது தத்துவ உபாசனை பண்ணுகிறவர்களும் இதை மந்திரமாக வைத்துக் கொள்ளலாம். இது மனிதனைப் பாரமார்த்திக உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது.
சூரிய காயத்ரி
ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
1. வினாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத்
3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்
6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்
7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்
8. ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்
11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
15. ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
16. ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
17. நந்தீஸ்வரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்
19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்
20. ஸ்ரீ காளி காயத்ரி
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவ ப்ரசோதயாத்
22. காலபைரவர் காயத்ரி
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்
24. சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
25. அங்காரக காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக ப்ரசோதயாத்
26. புத காயத்ரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
27. குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
28. சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
29. சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனி ப்ரசோதயாத்
30. ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
31. கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்
32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

Saturday, 1 June 2013

ஜூன் மாத முக்கிய நாட்கள்


                            ஜூன்  மாத  முக்கிய நாட்கள்

03.06.13             தேய் பிறை  முகூர்த்தம்
06.06.13             பிரதோஷம்
07.06.13             கிருத்திகை
08.06.13             அமாவாசை
12.06.13             சதுர்த்தி & வளர்பிறை 
முகூர்த்தம்
13.06.13            
வளர்பிறை  முகூர்த்தம்
14.06.13             சஷ்டி விரதம்
19.06.13            
வளர்பிறை  முகூர்த்தம்
21.06.13             பிரதோஷம்
22.06.13            பௌர்ணமி
23.06.13           
வளர்பிறை  முகூர்த்தம்
26.06.13            சங்கடஹர சதுர்த்தி &
தேய்பிறை  முகூர்த்தம்
27.06.13           
தேய்பிறை  முகூர்த்தம்
28.06.13            சஷ்டி &
தேய்பிறை  முகூர்த்தம்

Thursday, 30 May 2013

கருப்பண்ணசாமி வழிபாடு!





வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி,
இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில்கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை-ராக்காயி.
ஐயன் ஐயப்பனும் கருப்பரும்
ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.
மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது அந்தப் பாடல் வரி. கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....
மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி..  எனப் போற்றுகின்றன!
பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!
பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடுவளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடுஎனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்!
ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு ஏ.கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.
பதினெட்டாம்படி கருப்பர்
சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.
காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!
கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
தியான ஸ்லோகம்
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:

Sunday, 26 May 2013

குரு பெயர்ச்சி பரிகாரங்கள்



மேஷம்: விநாயகர், முருகன், துர்கையை  வழிபடுங்கள். வியாழன்தோறும் குருவுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வறுகடலை, வெல்லம் தானம் கொடுங்கள். சிவப்புநிற ஆடை அதிர்ஷ்டம் தரும்.

ரிஷபம்: கணபதி ஹோமம், மஹாசண்டி ஹோமம், லஷ்மி குபேரபூஜை செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு மருத்துவ உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்து தரலாம். சந்தன நிற ஆடை அணிவது நல்லது.

மிதுனம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். மஞ்சள்நிற இனிப்புப் பண்டலங்களை வியாழக்கிழமைகளில் காக்கைக்கு இடுங்கள். இடது கையில் வெள்ளி வளையம் அணிந்தால் நல்லது. அசிரி மாவினால் சிறுசிறு உருண்டைகள் செய்து, ஆறு குளத்து மீன்களுக்குப் போடுவது புண்ணியம் தரும்.

கடகம்: பார்வதி, பரமேஸ்வரர், ஸ்ரீலஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகியோரை வழிபட  வேண்டும். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். வெல்லம், கோதுமை, சிவப்பு மலர்கள், தாமிரப் பாத்திரம் இவற்றைக் கோவிலுக்குக் கொடுப்பது சிறந்தது.

சிம்மம்: சூரியனை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். அதிதேவதையாக ருத்ரனையும் வழிபடலாம். கணபதி, ஸ்ரீதுர்கை மற்றும் ராகுவையும் வழிபடலாம். ஞாயிறுதோறும் எருக்கஞ்செடிக்கு நண்பகல் நேரத்தில் நீருற்றலாம்.

கன்னி: ஸ்ரீலஷ்மி நாராயணரை வழிபடுங்கள். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். நெற்றியில் மஞ்சள் சந்தனம் அணிய, சுபகாரியத் தடை விலகும்.

துலாம்: மகாகணபதி, ஸ்ரீதுர்கை, ராகு-கேது ஆகியோரை வழிபடவும். கடுகு,  புகையிலை தானம் கொடுக்கலாம். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்யுங்கள். பொன் ஆபரணம் ஒன்றை அணிவது சிறப்பு.

விருச்சிகம்:ஸ்ரீதுர்கை, கணபதி, ஸ்ரீவிஷ்ணு, பைரவ ஆராதனைகள்  செய்ய வேண்டும். பெரியவர்களையும் பெற்றோர்களையும் கவுரவிக்கவும். ஏழை சிறுவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். சிவப்பு ஆடை அணிவது செல்வம் சேர்க்கும்.

தனுசு: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு திருநாகேஸ்வரம் சென்று பால் அபிஷேகம் செய்தால் சிறப்பு உண்டாகும். மஞ்சள்  ஆடை உடுத்துங்கள். திங்கட்கிழமைகளில் சிவ ஆராதனை செய்யுங்கள்.

மகரம்: ஸ்ரீவிநாயகரை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் பைரவரை  கும்பிட வேண்டும். ஆராதியுங்கள். வீட்டில் வாழைமரம் வளர்த்து, அதனடியில் நெய் விளக்கேற்றுங்கள். எள், உளுந்தை ஓடும் நதி நீரில் போடுவது சிறந்த பரிகாரம் ஆகும்.

கும்பம்: சனிபகவானை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள் சாதம் இடுங்கள். பார்வையற்றவர்களுக்கும்  இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். சிவபெருமானையும் பத்ரகாளிளையும் வழிபடுங்கள்.

மீனம்: ஸ்ரீதுர்கை, விஷ்ணுவை வணங்க வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு தோஷத்தை அறவே போக்கும். மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது.  

Tuesday, 21 May 2013

வாழ்கையில் செய்ய வேண்டிய சில முக்ய ஹோமங்கள்



வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், படிப்பில் மட்டும் கவனம் செல்லவும்,  நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்.

மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
பிறந்தநாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காக இது சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தை செய்தால் ஆயுள் விருத்தியடையும். நீண்டநாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்.

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.

Monday, 20 May 2013

முயற்சி



முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்கக்கூடாது . யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாக்கூடாது. இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.
எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல்  உண்டாகி விடும்.

Tuesday, 14 May 2013

Message from Mrs.Sumathi



                         


                                  தேங்காய் பிரார்த்தனை

நான் சுமதி அய்யனாவரத்தில்   வசிக்கின்றேன், எனக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும் உள்ளனர்,பெண் மற்றும் பையன் இருவருக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டேன்   எனது கணவர்1978 ம் வருடம் எங்களை விட்டு சிவலோக பதவி அடைந்துவிட்டார், எனது சொந்த நிலத்தில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தது அதை எப்படி தீர்ப்பது என்று வழி தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் .
அப்பொழுது இவ்வாலயத்தில் தேங்காய் பிரார்த்தனை பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து தேங்காய் பிரார்த்தனையை செய்து வந்தேன் ஐயனின்  பேரருளால் என்னுடைய நில பிரச்னை சுமுகமாக முடிந்தது. ஐயன் மிது நான்  கொண்ட  திராத பக்தியும் நம்பிக்கையும் தான் இதற்கு முக்ய காரனம் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் .இங்கு வரும் பக்தர்களும் பக்தியுடம் நம்பிக்கையுடனும் இறைவனை வேண்டி பயன் அடையும் படி மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு

சுமதி
அய்யனவரம்

Wednesday, 8 May 2013

நல்லதை மட்டும் சிந்தியுங்கள்


உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான்.

உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும்.

முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.

மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியம்.

பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது.

நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி செய்ய முடியாது.

தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.
தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி பின்தொடரும்.

Monday, 6 May 2013

அர்ப்பணிப்பு உணர்வு



1.   அர்ப்பணிப்பு உணர்வுடன், வாழ்வை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட்டால் கவலைக்கு வழியில்லை. அவருடைய கருணை, எப்போதும் நம்மைக் காத்துக் கொண்டிருக்கும்.

2.   மிருகங்களைப் போல, கீழான உணர்ச்சிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருந்தால் வாழ்வு வீணாகிவிடும். மனிதப்பிறவி மகத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3.   மனதில் எப்போதும் அமைதி நிறைந்திருக்க வேண்டும். அது ஒன்றே மிகப் பெரிய செல்வம்.

4. இன்பமோ, துன்பமோ இரண்டும் புறப்பொருள்களைச் சார்ந்தவை அல்ல. ஒருவரின் மனதைப் பொறுத்தே உண்டாகின்றன.

5.   வாழ்க்கையில் பிரச்னைகளை யாராலும் தவிர்க்க முடியாது. அவற்றை சவாலாக ஏற்று சமாளித்து, வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

6.   நூறு நன்மை செய்திருந்தும், ஒரு தீமை செய்து விட்டால் கூட, உலகம் உங்களைப் புறக்கணித்து விடும். நூறு தீமை செய்தவனும் வாழ்வில் ஒரு நன்மை செய்ய விரும்பினால் கூட கடவுள் அவனை ஏற்றுக் கொள்வார்.

7.   தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் எவ்வளவோ கஷ்டப்பட தயாராக இருக்கிறோம். ஆனால், அழியாத ஆனந்தம் தரும் கடவுளுக்காக நாம் ஒரு நிமிடம் கூட செலவழிக்கத் தயாராக இல்லை.

8.   சூரிய உதயத்திற்குப் பின் தூங்கும் வழக்கம் நல்லதல்ல. இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தினர் அனைவரும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிட பழக வேண்டும்.

9.   தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருப்பது நல்லது. முடிந்தால் வாரத்தில் ஒருநாள் மவுனவிரதம் மேற்கொள்ளுங்கள்.

10.   நம் உள்ளம் கோயில். அங்கிருக்கும் கடவுளுக்கு நல்ல எண்ணமே அர்ச்சனை மலர்கள். நல்ல சொல்லே பாமாலை. அன்பே அவர் விரும்பும் நைவேத்யம்.

11.   கோபம் வரும்போது நம் உடலின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் ஆற்றல் வெளியேறுகிறது. 
12.   பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது நம் பலவீனம் அல்ல. அடக்கமும்,பணிவும்மனிதனை நன்னெறிப்படுத்தும் பண்புகள்.

13.   தேவைகளைக் குறைத்துக் கொண்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கும், தர்மபணிகளுக்கும் செலவிட வேண்டும்.

14.   பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது. உணவாகவோ, உடையாகவோ கொடுக்கலாம்.

15.   பெண்கள் சமையலில் ஈடுபடும்போது நல்ல சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் தர வேண்டும். சமைத்தவர்களின் இயல்பு அதை உண்பவர்களுக்கும் பரவும் என்பதை மறத்தல் கூடாது.

16.   காலையும், இரவும் மிதமான உணவும், மதியம் தேவையான அளவும் உண்பது நல்லது. வயிறு நிரம்ப சாப்பிடுவது மந்தபுத்தியை உண்டாக்கும்.

17.  இன்று இல்லாவிட்டாலும், நாளையாவது பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குணம் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது. அதில் ஒருபோதும் குறைபாடு நேர்ந்து விடக் கூடாது.