Wednesday, 26 June 2013

வாழ்கையின் ரகசியம்



சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.

இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.

பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை. அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.

தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.

நீங்கள்  நதியைப் போல் இருங்கள். உங்கள்  ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதிர்கள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறுங்கள். வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பீர்கள். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதிர்கள், தொடர்ந்து சிறந்து செயல் படுங்கள். தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதிர்கள். பயனில்லை.

தொடர்ந்து முன்னேறுங்கள். பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதிர்கள். உங்கள் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதிர்கள்.  சில சௌகரியமான  நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதிர்கள்.  அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீங்கள்  சரித்திரம் படைக்க முடியும். உங்கள் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதிர்கள்.  

வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீங்கள்  சந்திப்பவர்கள் எல்லாம் உங்களால்  பயன் பெறுவர். பலர் சிறக்க நீங்கள் காரணமாவிர்கள் . கஷ்டங்களும்,சங்கடங்களும் நம்மிடம் யாரும் கையில் கொடுபதில்லை,அவைகள் நாம் அறிந்தும்,அறியாமலும்  செய்யும் தவறுகளால் ஏற்படுகின்றன. அந்த தவறுகளை ஏற்று கொள்ளும் மனபக்குவம் நமக்கு இருந்தால் போதும். வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.

நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

Friday, 14 June 2013

Wednesday, 12 June 2013

Monday, 10 June 2013

பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை


ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”
“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”
“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.
பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.
அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல



Sunday, 9 June 2013

பிரம்ம காயத்ரி



காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும் அமைந்திருக்கிறது. பரப்பிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்குப் பல காயத்ரீ மந்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளைத் தேவீ காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்பிரமணிய காயத்ரீ, கணேச காயத்ரீ என்று பாகுபடுத்தலாம்.

இத்தனைவிதக் காயத்ரிகளுள் நாடு முழுதுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொதுவாக இருந்துவருகிற காயத்ரி ஒன்றே. அது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப் படுகிறது.  பரமஹம்ச காயத்ரீ என்பது ஒன்றுண்டு; அது துறவிகளுக்கு உரியதாகும். துறவியர்கள் உட்பட வழிபாடு  செய்கின்ற மக்கள் எல்லார்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி.

ஒரு மந்திரத்தினுடைய அர்த்தம் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அதை உச்சரிக்கின்ற அளவு உச்சரிக்கின்றவர்களை அது பக்குவப் படுத்துகிறது. அந்த வல்லமை மந்திர சக்தி என்று சொல்லப் படுகிறது. மந்திரத்தின் ஓசைக்கு அலாதியான சக்தி இருக்கிறது. இறைவனுய குறிப்பிட்ட திருநாமம் மந்திரமாகிறது. ”ஓம் நம்: சிவாய” என்பது மந்திரம். “ஓம் நமோ நாராயணாய” என்பது மந்திரம். இவை சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உரிய மந்திரங்களாம். பிரம்ம காயத்ரியை எந்தத் தெய்வத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தெய்வத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது தத்துவ உபாசனை பண்ணுகிறவர்களும் இதை மந்திரமாக வைத்துக் கொள்ளலாம். இது மனிதனைப் பாரமார்த்திக உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது.
சூரிய காயத்ரி
ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
1. வினாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக ப்ரசோதயாத்
3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்
6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்
7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்
8. ஸ்ரீ ராமர் காயத்ரி
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்
11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
15. ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
16. ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
17. நந்தீஸ்வரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்
19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்
20. ஸ்ரீ காளி காயத்ரி
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவ ப்ரசோதயாத்
22. காலபைரவர் காயத்ரி
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்
24. சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
25. அங்காரக காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக ப்ரசோதயாத்
26. புத காயத்ரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
27. குரு காயத்ரி
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
28. சுக்ர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
29. சனி காயத்ரி
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனி ப்ரசோதயாத்
30. ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
31. கேது காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்
32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

Saturday, 1 June 2013

ஜூன் மாத முக்கிய நாட்கள்


                            ஜூன்  மாத  முக்கிய நாட்கள்

03.06.13             தேய் பிறை  முகூர்த்தம்
06.06.13             பிரதோஷம்
07.06.13             கிருத்திகை
08.06.13             அமாவாசை
12.06.13             சதுர்த்தி & வளர்பிறை 
முகூர்த்தம்
13.06.13            
வளர்பிறை  முகூர்த்தம்
14.06.13             சஷ்டி விரதம்
19.06.13            
வளர்பிறை  முகூர்த்தம்
21.06.13             பிரதோஷம்
22.06.13            பௌர்ணமி
23.06.13           
வளர்பிறை  முகூர்த்தம்
26.06.13            சங்கடஹர சதுர்த்தி &
தேய்பிறை  முகூர்த்தம்
27.06.13           
தேய்பிறை  முகூர்த்தம்
28.06.13            சஷ்டி &
தேய்பிறை  முகூர்த்தம்