சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 26 April 2013

எல்லா பொருளையும் அட்சய திரிதியையில் வாங்கலாம்


"அட்சய திரிதியை'’

இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம்.

"அட்சய' என்றால் "வளர்தல்':திரவுபதி, கவுரவர்களின் அவையில் துகில் உரிந்து அவமானப்படுத்தப்பட்டாள். தன்னைப் பாதுகாக்க வர வேண்டும் என கிருஷ்ணரை அழைத்தாள். அப்போது, அவள் கிருஷ்ணரின், பதினாறு திருநாமங்களைச் சொல்லி கதறினாள். கிருஷ்ணரும் அங்கு வந்து "அட்சய' என்றார். அவளது ஆடை வளர்ந்து கொண்டே போனது. துகிலுரிந்த துச்சாதனன் மயங்கியே விழுந்து விட்டான்."அட்சய' என்ற சொல், அந்தளவுக்கு வளர்ச்சியைத் தரக்கூடியது. இதனால் தான், அட்சய திரிதியை நாளில், பொருட்களை வாங்கினால் அவை பல மடங்காகப் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க வேண்டுமென்பதில் தான், அநேகர் அக்கறை செலுத்துகின்றனர். தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், இந்த நாளில் வெள்ளி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஏ.சி., என எந்தப்பொருளையும் வாங்கலாம்.இந்நாளில், புத்தாடை உடுத்துவதும், தானம் செய்வதும் விசேஷம். எனவே ஜவுளிக்கடைகளுக்கும் சென்று வரலாம்.

இந்த நாளில் பாத்திரங்கள் வாங்கலாம். இவற்றை முதன் முதலாக அடுப்பில் வைக்கும் போது, இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகங்கள், பாடல்களையோ சொல்லி வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தடையற்ற வகையில் உணவு கிடைக்கும். சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலை வைத்திருந்த பாத்திரத்துக்கு "அட்சய பாத்திரம்' என்று பெயரே சூட்டியிருந்தாள். இந்த பாத்திரத்தில் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும்.இதெல்லாம் சிரமம் என்பவர்களுக்கு எளிய வழி ஒன்று உள்ளது. இந்நாளில், மளிகைப் பொருட்கள் வாங்கி வைக்கலாம். திரிதியை திதி லட்சுமிக்குரியது என்பதால் அவளுக்கு பிடித்தமான மஞ்சள், உப்பு அவசியம் வாங்கி வையுங்கள். ஆக, அட்சய திரிதியை அன்று நீங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காணலாம்.


Tuesday, 23 April 2013

Bhagavath-geetha


bhagavath-geethai by sasthaparipalana

ஓம் நமோ நாராயணாய

 



சிவவாக்கியர் கூறும் மந்திரம் ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம், மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும்.
அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை.

 


Sunday, 21 April 2013

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் — ஆசை



வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்;ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்து  மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
நன்றி :- கவிஞர் கண்ணதாசன்

Thursday, 18 April 2013

மீனாட்சி அம்மன் கோவிலில்






மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்க நாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது
அம்பாளையும், சுவாமியையும் உடைத்துநொறுக்கமுயற்சிநடந்தது.
கோவில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர்கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவ லிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலை தான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்கமுற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 வருடங்களாக அடைக்கப்பட்டு பூஜையில்லாமல்இருந்தது.
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களைவென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடுசெய்தார். அப்போது 48 வருடங்களுக்கு முன்பு பூசப்பட்ட சந்தன நறுமணம் வீசியது. சிவ லிங்கத்தின் இரு புறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளிவிளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தது.
சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமிசன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் இருக்கிறது . அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம்பெற்றுள்ளது.

Tuesday, 16 April 2013

ஓம் விநாயக போற்றி



ஓம் அனுகை விநாயக போற்றி
ஓம் அர்க்க விநாயக போற்றி
ஓம் அபிசாண்டி விநாயக போற்றி
ஓம் அபர விநாயக போற்றி
ஓம் அபிமுத்த விநாயக போற்றி
ஓம் அரிச்சந்திர விநாயக போற்றி
ஓம் அழகிய விநாயக போற்றி
ஓம் ஆசரசிருஷ்டி விநாயக போற்றி
ஓம் ஆக்கினை விநாயக போற்றி
ஓம் ஆமோத விநாயக போற்றி

ஓம் ஆண்ட விநாயக போற்றி
ஓம் ஆதி விநாயக போற்றி
ஓம் ஆழத்துப் பிள்ளையார் போற்றி
ஓம் உபதாப விநாயக போற்றி
ஓம் உச்சி பிள்ளையார் போற்றி
ஓம் உடுண்டி விநாயக போற்றி
ஓம் ஊர்த்துவாண்டமுண்ட விநாயக போற்றி
ஓம் ஏகதந்த  விநாயக போற்றி
ஓம் ஏரம்ப விநாயக போற்றி
ஓம் ஏகோபயப்பிரத விநாயக போற்றி

ஓம் கசகன்ன விநாயக போற்றி
ஓம் கண்டா விநாயக போற்றி
ஓம் கணப விநாயக போற்றி
ஓம் கற்பகப் பிள்ளையார் போற்றி
ஓம் கல்முத்து விநாயக போற்றி
ஓம் கஜான விநாயக போற்றி
ஓம் கணேசர் விநாயக போற்றி
ஓம் கணபதி விநாயக போற்றி
ஓம் கபில விநாயக போற்றி
ஓம் கங்கை கணபதி போற்றி

ஓம் கடுக்காய் விநாயக போற்றி
ஓம் கருக்கடி விநாயக போற்றி
ஓம் கள்ளவாரணப் பிள்ளையார் போற்றி
ஓம் கார்த்தி விநாயக போற்றி
ஓம் குலப்பிரிய விநாயக போற்றி
ஓம் கூபதந்த விநாயக போற்றி
ஓம் கூப்பிடு பிள்ளையார் போற்றி
ஓம் கூர்நிதாக்ஷ விநாயக போற்றி
ஓம் கைகாட்டி விநாயக போற்றி
ஓம் கோடி விநாயக போற்றி

ஓம் சந்திர விநாயக போற்றி
ஓம் சலாடக விநாயக போற்றி
ஓம் சதுர்த்தி விநாயக போற்றி
ஓம் சமுசிக விநாயக போற்றி
ஓம் சித்தி விநாயக போற்றி
ஓம் சித்தரூப விநாயக போற்றி
ஓம் சிங்கமுக விநாயக போற்றி
ஓம் சிந்தாமணி விநாயக போற்றி
ஓம் சித்தி புத்தி விநாயக போற்றி
ஓம் சிவப்பிரகாச விநாயக போற்றி

ஓம் சிகாமணி விநாயக போற்றி
ஓம் சுமுக விநாயக போற்றி
ஓம் சுந்தர கணபதி போற்றி
ஓம் சுமங்கள விநாயக போற்றி
ஓம் சூதவனப் பிள்ளையார் போற்றி
ஓம் செவிசாய்த்த விநாயக போற்றி
ஓம் செல்வ விநாயக போற்றி
ஓம் சொர்ண விநாயக போற்றி
ஓம் தந்தவக்கிர விநாயக போற்றி
ஓம் தரணிதர விநாயக போற்றி

ஓம் தால மூல விநாயக போற்றி
ஓம் திரிமுக  விநாயக போற்றி
ஓம் திருமுறைசுட்டிய விநாயக போற்றி
ஓம் துண்டி விநாயக போற்றி
ஓம் துர்க்கை விநாயக போற்றி
ஓம் துன்முக விநாயக போற்றி
ஓம் துவாரக விநாயக போற்றி
ஓம் துன்பந்தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் துணைவந்த விநாயக போற்றி
ஓம் தூமகேது விநாயக போற்றி

ஓம் நீச விநாயக போற்றி
ஓம் பஞ்சமி விநாயக போற்றி
ஓம் பஞ்சமுக விநாயக போற்றி
ஓம் பந்து விநாயக போற்றி
ஓம் பாகீரத விநாயக போற்றி
ஓம் பாலசந்திர விநாயக போற்றி
ஓம் பால விநாயக போற்றி
ஓம் பிரசன்ன விநாயக போற்றி
ஓம் பிரணவ விநாயக போற்றி
ஓம் பிரவாள விநாயக போற்றி

ஓம் மணிகன்ன விநாயக போற்றி
ஓம் மந்திர விநாயக போற்றி
ஓம் மகோற்கடர் விநாயக போற்றி
ஓம் மயூரேசர் விநாயக போற்றி
ஓம் முழுமுதற்கடவுள் விநாயக போற்றி
ஓம் முண்ட விநாயக போற்றி
ஓம் மூஷிகவாகன விநாயக போற்றி
ஓம் மோதகப் பிரிய விநாயக போற்றி
ஓம் மோதக விநாயக போற்றி
ஓம் யானை முகத்து விநாயக போற்றி

ஓம் லம்போதர விநாயக போற்றி
ஓம் வக்ரதுண்டாய விநாயக போற்றி
ஓம் வக்கிரதுண்ட விநாயக போற்றி
ஓம் வரத விநாயக போற்றி
ஓம் வல்லாள விநாயக போற்றி
ஓம் வசிஷ்ட விநாயக போற்றி
ஓம் வன்னி விநாயக போற்றி
ஓம் வாமன விநாயக போற்றி
ஓம் விக்கின விநாயக போற்றி
ஓம் விடாங்க விநாயக போற்றி

ஓம் விராசபுத்திர விநாயக போற்றி
ஓம் விக்கினராஜ விநாயக போற்றி
ஓம் விக்னேஸ்வர விநாயக போற்றி
ஓம் வினை தீர்க்கும் விநாயக போற்றி
ஓம் விஷ்ணு விநாயக போற்றி
ஓம் வீம விநாயக போற்றி
ஓம் வீர சுத்தி விநாயக போற்றி
ஓம் க்ஷத்ரபால விநாயக போற்றி

Saturday, 13 April 2013

திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை






முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சனிக்கிழமை விரதம்:
சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( தஞ்சாவூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.

ஏழரையை பிரிக்கும் விதம் ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது 221/2 ஆண்டுகள் அவர் ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.

சனி தோஷம் விலக்கும் பாடல்
அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
3. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
4. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
5. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
6. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
9. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
10. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
11. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே!

Thursday, 11 April 2013

அம்பத்தூரில் ஓர் சபரிமலை உருவான வரலாறு



      

  
    அம்பத்தூர் பானு நகரில் வசிக்கும் திரு முத்துகிருஷ்ணன் குருசுவாமி அவர்கள் ஐயப்பன் மீது தீராத பக்தி கொண்ட அன்மீக அன்பர். 1964 ம் ஆண்டு முதல் சபரிமலைக்கு ஆண்டுதோறும் தன்  குழுவுடன் இருமுடி கட்டி  செல்வது வழக்கம்.
        அவரைப்போலவே அவர் மகனும் திரு  அம்பாசங்கர்  அவர்கள் ஐயப்பன் மீது அதிக ஈடுபாடும் பக்தியும் கொண்டவர், பஜனைசெய்வதிலும்/  கீர்த்தனைகள்பாடுவதிலும்  ஆன்மிகத்திலும், அன்னதானம் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர், எல்லோரிடத்திலும் அன்பு கொண்டவர், கருணையுள்ளம் கொண்ட சிறந்த பண்பாளர்.   
ஒவ்வொரு ஆண்டும்/ மாதமும் தன் குழுக்களுடன் சபரிமலைக்கு அனைவருடன் இருமுடி கட்டி  சபரிமலை சென்று ஐயனை தரிசிப்பது வழக்கம்
      அவ்வாறு      2000 ம்  ஆண்டு சபரிமலை செல்லும்போது வண்டி பெரியார் கிராமதேவதைக்கு படையல் இட்டு பூஜை போடும்போது ஏன் அம்பத்தூரில் ஒரு சபரிமலையை உருவாக்க கூடாது என்று எண்ணம் அங்கு தோன்றியது  இது வண்டி பெரியார் கிராமதேவதை யின் கட்டளையா? அல்லது எம்பெருமான் ஐயப்பனின் பேரருளா என்பது விளங்கவில்லை. இதனைப்பற்றி தன்னுடன் வந்த பக்தகோடிகளுடன் கலந்து ஆலோசிக்கும் போது அம்பத்தூரில் வசிக்கும் திரு வேல்முருகன் அவர்களின் புதல்வர் திரு S .ஸ்ரீகாந்த் அவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஐயப்பன் கோவிலை கட்ட நான் இலவசமாக நிலம் தருகிறேன்  என்று கூரினார் .
   சபரிமலை யாத்திரை முடிந்து அம்பத்தூர் வந்த உடன் தனக்கு சொந்தமான நிலத்தை ஐயப்பன் ஆலயம் கட்ட தானமாக தந்தார். மேலும் இது சம்பந்தமாக திரு V S D . ரமேஷ் அவர்களை  அணுகியபோது அவரும் பெரும்தன்மையுடன் தனது நிலத்தை தானமாக தந்து உதவினார்.  .
       மேலும் பல ஐயப்ப பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து சாஸ்த பரிபாலன டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆலயம் கட்ட முடிவெடுத்து 2001 ம் ஆண்டு அம்பத்தூர்ல் சபரிமலை கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலையில் உள்ளதுபோல் ஒரு மினி சபரிமலையை 18ம் படியுடன்  உருவாக்கி பக்தர்களின் பார்வைக்காக அம்பத்தூர் மகாலட்சுமி கல்யாண மண்டப்பத்தில் வைக்கபட்டது,அதற்கு பக்தர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மேலும்  உற்ச்கமும் உக்கத்தையும் தந்தது,இதனை தொடருந்து காணிபையூர் திரு கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களை அணுகியபோது அவர் சபரிமலையில் உள்ளது போல உள்ள ஆலய அமைப்பு   வரைபடத்தை தயாரித்து கொடுத்தார்.   அதன்பிறகு  டிரஸ்ட் நன்கொடைகள் பெற செயல்பட துவங்கியது பக்தகோடிகளின் தாராளமான நன்கொடைகளாலும்  ஐயப்பனின் பேரருளும்  2005 ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி சபரிமலை தாந்திரி திரு மொஹனருகண்டரு அவர்கள் தலைமையில் பல்லாயிரம் பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்ப என்ற சரணகோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது

Wednesday, 10 April 2013

இன்றைய நாள்

April 10, 2013 - Wednesday
Month : சாந்த்ரமான பால்குணா, 

Paksha : சுக்கிரன் அஸ்த
Tithi திதி : அமாவாசை 03:06 PM
Sunrise சூரியோதயம் : 06:01 AM,

Sunset சூரியாஸ்தமனம் : 06:21 PM
Moonrise சந்திரௌதயம் : 05:43 AM
Star நக்ஷத்திரம் : ரேவதி 09:32 PM
Yoga யோகம் : வைத்ருதி 03:01 AM (next day)
Solar Zodiac சூரியன்ராசி : மீனம்,

Lunar Zodiac சந்திரன்ராசி : மேஷம்21:28:28
Rahukal ராகுகாலம் : 12:15 PM to 01:43 PM
Yamaganda யம கண்டம் : 07:37 AM to 09:07 AM
Durmuhurth துர்முஹுர்த்தம் : 11:47 AM to 12:36 PM
Varjya தியாஜ்யம் : 08:59 AM to 10:38 AM
Amritakal அமிர்தயோகம் : 07:01 PM to 08:40 PM



Tuesday, 9 April 2013

இன்றைய நாள்


April 9, 2013 - Tuesday
Month : சாந்த்ரமான பால்குணா, 

Paksha : சுக்கிரன் அஸ்த
Tithi திதி : சதுர்த்தசி 02:44 PM
Sunrise சூரியோதயம் : 06:01 AM, 

Sunset சூரியாஸ்தமனம் : 06:25 PM
Moonrise சந்திரௌதயம் : 05:01 AM
Star நக்ஷத்திரம் : உத்திரட்டாதி 08:23 PM
Yoga யோகம் : ஐந்த்ரா 03:34 AM (next day)
Solar Zodiac சூரியன்ராசி : மீனம், 

Lunar Zodiac சந்திரன்ராசி : மீனம்
Rahukal ராகுகாலம் : 03:18 PM to 04:51 PM
Yamaganda யம கண்டம் : 09:08 AM to 10:40 AM
Durmuhurth துர்முஹுர்த்தம் : 11:03 PM to 11:48 PM
Amritakal அமிர்தயோகம் : 03:27 PM to 05:08 PM



Monday, 8 April 2013

Today


April 8, 2013 - Monday


Month : சாந்த்ரமான பால்குணா,

Paksha : சுக்கிரன் அஸ்த


Tithi திதி : த்ரயோதசி 02:54 PM


Sunrise சூரியோதயம் : 06:06 AM,

Sunset சூரியாஸ்தமனம் : 06:24 PM


Moonrise சந்திரௌதயம் : 04:20 AM


Star நக்ஷத்திரம் : பூரட்டாதி 07:45 PM


Yoga யோகம் : ப்ரஹ்ம 04:32 AM (next day)


Solar Zodiac சூரியன்ராசி : மீனம்,

Lunar Zodiac சந்திரன்ராசி : மீனம்13:38:29


Rahukal ராகுகாலம் : 07:36 AM to 09:08 AM


Yamaganda யம கண்டம் : 10:42 AM to 12:15 PM


Durmuhurth துர்முஹுர்த்தம் : 03:07 PM to 03:53 PM


Varjya தியாஜ்யம் : 05:36 AM (next day) to 07:14 AM


Amritakal அமிர்தயோகம் : 11:42 AM to 01:21 PM

Saturday, 6 April 2013

Sabarimalai opening days

  நடை திறந்து இருக்கும் நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும். சபரிமலைக்கு செல்லமுடியாத பக்தர்கள் இங்கு இருமுடியுடன் வந்து 18ம் படி ஏறலாம்..
பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உள்ளும் ,50 வயதுக்கு மேலும் உள்ளவர்கள் 18ம் படி வழியாக அனுமதிக்கபடுவார்கள். மற்ற பெண் பக்தர்கள் சாதாரண வழியாக அனுமதிக்கபடுவார்கள். பெண்கள் சாதாரண வழியாக செல்ல வயதுவரம்பு ஏதும் இல்லை

 


Thursday, 4 April 2013

Tuesday, 2 April 2013


வரும் 07.04.2013 அன்று  திரு அஸ்வின் குமார் அவர்கள் குடும்பத்தின் சார்பாக இவ்வாலயத்தில் மஹா கணபதி ஹோமம்,ஸ்ரீ விநாயகர்ஸ்ரீமுருகர்ஸ்ரீநாகராஜர்ஸ்ரீமாளிகைபுரத்துஅம்மன் ஸ்ரீகருப்பண்ண சுவாமிஸ்ரீகாடுகடுத்தசுவாமி,
மற்றும் இவ்வாலயத்தின் கருவறையில் ஆனந்த மயமாய் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆகிய அனைவருக்கும் அஷ்டபிஷேகம்,அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகருக்கு சந்தன அலங்காரம் நடைபெற உள்ளது .அன்று மாலை ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளை பெறவேண்டுகிறோம்.       

Monday, 1 April 2013

ஏப்ரல் மாத முக்கிய நாட்கள்


01.04.2013                 சஷ்டி 
04.04.2013                 சுப முகூர்த்த தினம் 
07.04.2013                 பிரதோஷம் &  சுபமுகூர்த்த தினம்
08.04.2013                 மாத சிவராத்திரி 
09.04.2013                 அமாவாசை
13.04.2013                 கிருத்திகை 
14.04.2013                 சதுர்த்தி 
15.04.2013                சுபமுகூர்த்த தினம்
16.04.2013                சஷ்டிவிரதம் 
19.04.2013                ஸ்ரீராமநவமி 
23.04.2013                பிரதோஷம்
25.04.2013                பௌர்ணமி & சுபமுகூர்த்த தினம்  
28.04.2013                சங்கடஹர சதுர்த்தி .